வெளிநாட்டு கையிருப்பு 3.6 டொலர் பில்லியன்களாக உயர்ந்துள்ளது – அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவிப்பு!

Saturday, December 23rd, 2023

முழுமையாக வற்றிப் போயிருந்த இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க   ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதன்  பின்னர்  3.6 டொலர் பில்லியன்களாக உயர்த்த  முடிந்த்தென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார  தெரிவித்துள்ளார்.

பிரச்சிதமான தீர்மானங்களை மக்கள் விரும்புவதாலேயே அரசியல்வாதிகளும் பிரசித்தமான தீர்மானங்களை செயற்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறான அனைத்து  தருணங்களிலும் ஒரு நாடாக சரிவைச்  சந்திக்க நேரிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்  –

மக்கள் எப்போதும் பிரச்சிதமான தீர்மானங்களை விரும்புகிறார்கள். அதனால் அரசியல்வாதிகளிடமிருந்து பிரச்சிதமான தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பிரபலமான தீர்மானங்கைளை நோக்கிச் செல்லும் போது, நாம் அவற்றில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு கூறினோம். ஆனால் மக்கள் பிரபலமான தீர்மானங்களையே எடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் பிரபலமான முடிவுகள் எடுக்கப்பட்டபோது ஒரு நாடாக நாம் தோல்வியடைந்துள்ளோம்.

இதில் இருந்து எதிர்க்கட்சிகள் கூட தப்ப முடியாது. அவர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக முடிவுகளை எடுக்கும்போது அவற்றை எதிர்த்ததும் பிரபலமான தீர்மானம் என்பதால்தான். மேலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அவற்றை எதிர்த்தனர். இறுதியில், நமது நாடு ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து.

நாடு  எதிர்கொண்ட நெருக்கடியின்போது, இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் தான் இந்தப் பொறுப்பை ஏற்க முடியாது எனப் பின்வாங்கினர். அவர்களை போலவே ஜனாதிபதியும் நாமும் இந்தப் பொறுப்பை மறுத்திருந்தால்  எதிர்கட்சியினரின்  பேரணிகளுக்கு  பஸ்களில் கூட மக்கள் வந்திருக்கமாட்டார்கள். 

இப்போது எங்கள் மீது குற்றம் சாட்டும் சிலருக்கு நாங்கள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தமை நினைவில் இல்லை. அவர்கள் அரசாங்கத்தில் இருந்தார்கள். எதிர்க்கட்சியில் இருந்து வந்தே இதனைச் செய்தோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: