பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு!

Thursday, December 1st, 2016

யாழ். மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (30) புதன்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண மற்றும் யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் கலந்துகொண்டதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான  பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் அவரவர் திறமைகள் மற்றும் சேவை அடிப்படையில் அவர்களுக்கு பணத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பிரதி பொலிஸ்மா அதிபர் கருத்து தெரிவிக்கையில் – இந்த கௌரவிப்பு நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி நடத்தப்படவிருந்தது ஆனாலும் யாழ்ப்பாண நகரில் கடந்த காலமாக இருந்த சூழல் காரணமாக குறித்த திகதியில் நடத்த முடியாது போனது.

12

ஆனாலும் இன்று இந்த நிகழ்வினை நடத்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பொலிஸ்மாதிபரின் சுற்று நிருபத்தில் கூறியவாறு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்களுடைய சேவையின் அடிப்படையில் பரிசில்களை வழங்குமாறு கூறியிருந்தார்.

அவ்வாறு விசேட பரிசில்கள் பெறுவோரை, பொலிஸ்மா அதிபர் நேரடியாக கலந்துகொண்டு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு அனைவரையும் வரவழைக்கப்பட்டு உங்களுக்கு அவரின் கையால் பரிசில்கள் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.

661001891full-polic

பொலிசாரின் சிறந்த சேவையின் அடிப்படையில் அவரவர் சேவையினை பாராட்டும் வகையில் அவ்வப்போது பரிசில்கள் வழங்கப்படுவதே இந்த பரிசளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர் பதவியில் இருக்கலாம், கான்ச்டபலாக இருக்கலாம், உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியராக இருக்கலாம்.

உங்களுக்கு தெரியும் யார் வேலை செய்கிறார்கள் யார் வேலை செய்யாமல் இருக்கிறார்கள் என்று, அதேபோல் யார் பரிசு பெறுகிறார்கள். யார் பரிசு பெறவில்லையென்று.  நீங்கள் செய்யும் அதியுயர் சேவையின் நிமித்தம் பணப்பரிசில் மட்டுமல்லாது விஷேட பரிசில்களும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Related posts: