கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு திணைக்களம் கோரிக்கை!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் சில பிரதேங்களில் மழையுடனான வானிலை தொடரும் எனவும் சில பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்துக் காணப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் நாளை 16 ஆம் திகதி வரை கடலுக்குச் செல்வதை தவிர்க்கும்படி வளிமண்டலவியல் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது.
Related posts:
நாடாளுமன்றில் இன்று பிடல் கஸ்ரோவுக்கு அனுதாபப் பிரேரணை!
பயங்கரவாத தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்ள தொடர்ந்தும் முயற்சிக்கப்படும் - ஜனாதிபதி!
மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது - கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜ...
|
|