இலாபம் ஈட்டும் நிறுவனமாக இலங்கை போக்குவரத்துச் சபை உருவாகியுள்ளது – பிரதி போக்குவரத்து அமைச்சர்!

Wednesday, July 18th, 2018

நட்டத்தில் இயங்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபை, முறையான முகாமைத்துவம் காரணமாக தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியிருப்பதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே பிரதியமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை தற்போது தமது ஊழியர்களின் சம்பளம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை முறைப்படி வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வருட இறுதிக்குள் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 500 பஸ்களை புதிதாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதில் 400 பஸ்கள் 56 இருக்கைகளையும் 100 பஸ்கள் 35 இருக்கைகளையும் கொண்டிருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் இவ்வருட இறுதிக்குள் இந்த பஸ்கள் இறக்குமதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.

மேலும் ஹங்கேரியிலிருந்து ஆயிரம் பஸ்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சு ஆராய்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், 750 ஹைபிரிட் பஸ்கள் மற்றும் 250 இலத்திரனியல் பஸ்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts: