தொழிநுட்ப அறிவை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும் – ஜனாதிபதி!

Tuesday, September 10th, 2019


மாணவர்களை கல்வித்துறையில் சிறந்தவர்களாகவும் மனித நேயமிக்கவர்களாகவும் மாற்றுவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் மேல் மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பாட விதானங்களில் சிறந்து விளங்குவதைப்போன்று அவர்களை மனித நேயமிக்கவர்களாகவும் ஒழுக்கப் பண்பாடுடையவர்களாகவும் உருவாக்குவதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.

அதேநேரம் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஆசிரியர்களின் பங்கும் இருப்பதால் என்பதால் அது குறித்து மனிதாபிமானத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

கல்வி கற்ற சமூகத்தை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் எனவும் ஆசிரியர்களது ஆளுமை, நம்பிக்கை, இருப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு தொழிநுட்ப அறிவை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

Related posts: