தமிழ் மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கணிக்கப்பட மாட்டார்கள் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, November 16th, 2022

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து வேலைத்திட்டங்களில் இருந்தும் தமிழ் மக்களை புறக்கணிக்கும் நோக்கம் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர், வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினை குறித்து ஆராய வடக்கு ஆளுநர் தலைமையில் செலயலணி அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதேபோன்று நாடளாவிய ரீதியிலும் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளை கொண்டுள்ள இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்காக நடமாடும் சேவைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் அதனை இரட்டிப்பாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


நாட்டின் சிறந்த அனுபவமுள்ள அரசியல் தலைவர் ‘மஹிந்த ராஜபக்ச - ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புகழாரம்!
ஒரு நேர்மையான மனிதரின் மதிப்பு பற்றிய உரையாடல் வருங்கால குடிமக்களின் மனசாட்சியில் நிச்சயம் உருவாகும்...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிய இன்றுமுதல் விசேட நடவடிக்கை!