புதிய நாடாளுமன்ற அமர்வை மிகவும் எளிமையாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Monday, August 17th, 2020

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி வருகையை ஆடம்பர செலவுகள் இன்றி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

வழமையாக புதிதாக நாடாளுமன்றம் வரும் ஜனாதிபதிக்கு இராணுவ மற்றும் குதிரை அணி வகுப்பு உட்பட பிரமாண்ட வரவேற்று வழங்கப்படுவது வழமை.

இந்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் அதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்று அரியாசன உரை ஆற்றவுள்ளார்.

இந்நிகழ்வினை மிகவும் எளிமையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் எந்தவித ஆடம்பர நிகழ்வுகளும் இன்றி ஜனாதிபதியை வரவேற்பதற்காக வெற்றி கீதத்தை மாத்திரம் பாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நடத்த கூடாத நிகழ்வுகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் மீண்டும் வினவ வேண்டும் என நாடாளுனமன்ற பொது செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: