புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
Thursday, May 18th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும்-31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் சந்தேக நபர்கள் பத்துப் பேரும் நேற்றுப் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வித்தியாவின் படுகொலை வழக்குடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சந்தேகநபருக்கெதிரான விசாரணையையும் எதிர்வரும் -31 ஆம் திகதி வரை நீதவான் ஒத்தி வைத்தார்.
Related posts:
சட்டவிரோதமாக தங்கிய 16 பேர் கைது!
கடந்த 3 மாதங்களில் 20,365 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - 8 பேர் உயிரிழப்பு - . சுகாதார அமைச்சு தகவல்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்த முத்திரைகள் இரத்து - அஞ்சல் மா அதிபர் தெரிவிப...
|
|
|


