தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறல் தடுக்கப்படும் – மஹிந்த அமரவீர!

Sunday, August 21st, 2016

வடபகுதி மீனவர்களின் கடல்தொழிலுக்கு சவாலை ஏற்படுத்திவரும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சி – சாந்தபுரம் கிராமத்தில் குளத்தை அண்டிய கிராம வெகம அபிவிருத்தி எனும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர கிளிநொச்சிக்குவிஜயம் செய்து கிராம வெகம என்ற இந்த அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

இதற்பின்னர் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னிலங்கை மீனவர்கள் வடபகுதிக்குள் அத்துமீறுகின்ற செயற்பாடுகள் குறித்து தமக்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் கூறினார். தென்னிலங்கை மீனவர்கள் இப்பகுதிக்கு வருவது தொடர்பாக தொடர்ச்சியாக எம்மிடம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந்த அத்துமீறல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையை மீன்பிடித்துறை அமைச்சு மேற்கொள்ளும். எந்தவித அனுமதியும் அற்ற நிலையிலேயே சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

நீண்டகாலமாக இங்குவந்து இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவே அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் இந்த அத்துமீறல்களை வரையறைக்குள் கொண்டுவரவும், அத்துமீறல்களை தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்“ – என்றார்.

Related posts: