வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
Tuesday, December 13th, 2016
வேலணை பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக கட்சியின் பரதேச பொதுச்சபை உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர்.
கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளரான கருணாகரகுருமூர்த்தி (மோகன்) தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2017 ஆம் ஆண்டு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது பன்முகப்படத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக பிரதேசத்தின் அனைத்து வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் ஆராயப்பட்டது.
இதன்போது கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி (யசோ) மற்றும் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டு கட்சியால் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


