நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்த முத்திரைகள் இரத்து – அஞ்சல் மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, October 8th, 2024

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இந்திய - இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பார...
பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - வடக்கின் ஆளுநர் ஐ...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரி...