வடக்கு, கிழக்கில் சட்டவிரோத நிர்மாணங்கள் – நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீண்டும் தெரிவிப்பு!!

Monday, May 29th, 2023

இன நல்லிணக்கத்துக்கு குந்தகமதக இருக்கும் வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படு என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் பௌத்த அடையாளங்கள் நிறுவப்படுதல் தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு பதில் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் போர் நிலைமைகள் நீடித்தமையால் தொல்பொருள் பகுதிகள் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை. தொல்பொருள் என்பது நாட்டின் மரபுரிமைகள் சார்ந்த விடயமாகும். அதற்கும் இன அடையாளங்களுக்கும் தொடர்பில்லை.

ஆகவே, அவை தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை அமைச்சர் கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலை தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் தீர்ப்புக்கள் வந்தபின்னரே இறுதியான தீர்மானத்தினை எடுக்க முடியும்.

அத்துடன், கிளிநொச்சி உருத்திரபுரம் கந்தசுவாமி கோவில், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருளியல் அடையாளங்கள் காணப்படுவதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: