விரைவில் அமைச்சரவையில் மாற்றம் – அமைச்சர் தலதா அதுகோரல!
Saturday, February 4th, 2017
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் செய்ய இதுவே சரியான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில அமைச்சர்கள் தங்களது அமைச்சுக்களிலிருந்து மாற்றப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் மாற்றம் செய்வது பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும் அதனையிட்டு அமைச்சர்கள் பதற்றமடையக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
பரீட்சை திணைக்கள பெறுபேறுகளை ஒன்லைன் மூலம் உறுதி செய்தல்!
முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!
இலங்கையர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆய்வு - உலக சுகாதார ஸ்தாபனம், UNICEF மற்றும் சுகாதார அமைச்சு...
|
|
|


