முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!

Friday, November 27th, 2020

முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று (27) மற்றும் நாளை (28) கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பில் இந்த மாநாடு நான்காவது முறையாக இடம்பெறவுள்ளது.

இறுதி மாநாடு கடந்த 2014 ஆம் ஆண்டு புதுடில்லியில் இடம்பெற்ற நிலையில் இம்முறை மாநாடு 06 வருடங்களுக்கு பிறகு இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதற்கு மேலதிகமாக பங்களாதேஷ், சிசெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பு மட்டத்தில் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்திய சமுத்திரத்தின் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரிவுபடுத்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டின் ஊடாக கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
நாட்டில் நிதி இல்லை,தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு தீர்மானிக்கும் - மனுச நாணயகார யாழ்ப்பாணத்தில் தெரிவி...
நாடாளுமன்றத் தேர்தலில் கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்...