கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு!

Monday, May 4th, 2020

இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 718 ஆக  அதிகரித்துள்ளது.

இதனிடையே இதுவரை 293 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் தொற்றுறுதியான 13 கொரோனா தொற்றாளர்களில் 11 பேரும் கடற்படையினர் என தெரியவந்துள்ளது என்றும் இராணுவ தளபதி லெப்டின் ஜென்ரல் சவேந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றுறுதி காரணமாக நாட்டில் 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுள் கடற்படையை சேர்ந்த 293 பேர் உள்ளடங்கியுள்ளனர் எனவும் தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு நோய்த் தொற்றுக்குள்ளாகிய நிலையில் 527 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரொன வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 200 ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர். வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 216 பேர் அண்மையில் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: