வாரத்தில் 3 நாட்கள் அரச ஊழியர்கள் அவசியம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டும் – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Thursday, April 29th, 2021
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக வாரத்திற்கு 3 நாட்கள் அவசியம் வலுவலகத்திற்கு வருகை தந்து கடமையை நிறைவேற்ற வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அத்துடன் எஞ்சிய 2 தினங்கள் விடுமுறை தினமாக கருத்தப்பட மாட்டாது. நிறுவன பிரதானியின் உடன்பாட்டிற்கு அமைய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள வகையில் மாதத்தில் 8 நாட்கள் மாத்திரம் அரச ஊழியர்கள் கடமையாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை தவறாகும் என்று அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.ரத்னசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சரிவின் பின்னர் மீதொட்டமுல்லயில் திடீர் புவியியல் மாற்றம்
நேற்றும் இதுவரையில் 2,906 பேருக்கு கொரோனா!
தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


