கொரோனா தொற்றாளிகளுடன் தொடர்பிலிருந்த 40 ஆயிரம் பேர் இலங்கையிவல் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Monday, April 6th, 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்புடைய 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக குறித்த சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்புடைய 42,000 பேரை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் ஒரு நாளைக்கு சுமார் 300 பேரை மட்டுமே சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்கின்றனர். இது போதுமானதாக இல்லை.

இவ்வாறு சென்றால் சோதனைகளை எப்போது முடிப்பது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஆகையினால் விரைவான சோதனை கருவிகளைப் பயன்படுத்துவதற்கு மாற வேண்டும். எவ்வாறாயினும், தனிமைப்படுத்தும் செயல்முறை மட்டும் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உதவாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: