பயங்கரவாத தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்ள தொடர்ந்தும் முயற்சிக்கப்படும் – ஜனாதிபதி!

Sunday, June 16th, 2019

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை தொடர்ந்தும்  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி தான் மிகுந்த வேதனையுடன் நினைவுகூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


எவ்வாறிருப்பினும், இலங்கை அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான பலம் தெளிவாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும் என்று  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தஜிகிஸ்தான் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதியுடன் 50 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். 
அவர்கள் இன்று காலை 9.05 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: