வைத்தியசாலை ஊழியர்களுக்க உத்தியோகபூர்வ வீடமைப்புத் திட்டம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Wednesday, November 9th, 2016

வைத்தியசாலை ஊழியர்களுக்காக உத்தியோகபூர்வ வீடமைப்புத் திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக சென்று பார்வையிட்டதன் பின்னர் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அமைச்சர்; குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்திட்டத்தை 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர்; நம்பிக்கை தெரிவித்ததுள்ளார்.நிவித்திகல பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவையும் சுகாதார வைத்திய அத்தியட்சகர் பணிமனையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

பெல்மடுல்ல மாவட்ட வைத்தியசாலை, எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை, நிவித்திகல பிரதேச வைத்தியசாலை, களவான தள வைத்தியசாலை ஆகியவற்றை பார்வையிட்டார். களவான தள வைத்தியசாலைக்காக 5 மாடிக் கட்டிடமொன்றையும், 3 மாடி உத்தியோகபூர்வ வீடமைப்புத் திட்டமொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

b63fae108ae61462fb305c04858fe7b8_XL

Related posts: