குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

Saturday, September 16th, 2017

யாழ்ப்பாணக் குடாநாட்டில் டெங்கு நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த மாதத்தில் நேற்று வரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 76 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற டெங்கு கட்டுப்பாட்டுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் எதிர்வரும் 20ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படுகிறது. அது தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்.மாவட்டச் செயலாளர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. டெங்கு நோய்த் தொற்றின் பாதிப்பு அதிகரித்த பிரதேச செயலக பிரிவுகளாக கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்கள் உள்ளன. அதே நேரம் ஏனைய பிரதேசங்களிலும் அதன் தாக்கம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னெடுக்கப்படும் டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள் இடம்பெறும் என்று அந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: