பாடசாலைகளில் இலவச பாட புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு!

Tuesday, February 20th, 2018

மாணவர்களுடைய சதவீதத்தின் அடிப்படையில் வழங்கியதால் சிக்கல் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச பாடநூல்கள் இந்த வருடம் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்கப்படவில்லை என அறியமுடிகிறது.

மாகாணப் பாடசாலைகளுக்கு கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கும், தேசிய பாடசாலைகளுக்கும் உரிய பாடசாலைகளுக்கும் வருடாந்தம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் இலவச பாடநூல்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதேபோன்று நடப்பாண்டிலும் இவ்வாறு பாட நூல்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இருந்த போதும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களுக்குரிய சகல பாடப் புத்தகங்களும் வழங்கக்கூடிய எண்ணிக்கையில் இல்லை என பாடசாலை அதிபர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் குறைவாக உள்;ள பாடநூல்களுக்குப் பதிலாக பழைய மாணவர்கள் பயன்படுத்திய பழைய புத்தகங்களை மீளப்பெற்று புதிய மாணவர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும் பழைய புத்தகமோ புதிய புத்தகமோ இது வரைக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் பாடப்புத்தகம் இல்லாது கற்றல் கற்பித்தலில் சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும் பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விரைவாகச் செயற்பட்டு பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல்களைப் பெற்றுத்தர வேண்டும் எனப் பாடசாலை அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர்

Related posts: