அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் ஆபத்தில்லை – உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

Thursday, June 11th, 2020

எவ்வித அறிகுறிகளுமற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மரியாவான் கெர்கோவ் தெரிவித்துதுள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

எங்களிடம் உள்ள தரவுகள், ஒரு அறிகுறியற்ற கொரோனா தொற்றுள்ள நபர், மற்றொருவருக்கு கொரோனா தொற்றை பரப்புகிறார் என்பது மிகவும் அரிதாகவே தோன்றுகிறது.

இது மிகவும் அரிது. இவ்வாறு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிற நபர்கள், தொடர்பு தடம் அறிதல் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள்.

இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதில்லை என்பது தொடர்பு தடம் அறிந்த நாடுகளின் தரவுகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது.

இந்த தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் மறு ஆய்வு செய்கிறது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு - வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்கள...
எதிர்வரும் திங்கள்முதல் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - இ...
உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு வீடுகள் - தேசி...