ஐ.நா கூட்டத் தொடரை இலங்கை சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் – – அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!

Friday, February 18th, 2022

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஜெனிவா விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது.

இதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை பதில் கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை  அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை எதிர்க்கட்சியில் இருக்கும் போதிலிருந்து தெளிவாக குறிப்பிட்டு வருவதாகவும், ஆட்சிக்கு வந்ததன் பிறகு அதனை மாற்றிக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள், பிரேரணைகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க முடியாது என்பதை சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளோம் எனவும் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கிராமிய வீடமைப்பு செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் துறைசார் தரப்பினருடன் ஆலோசனை!
வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் - திசை மாறியுள்ளதால் அடுத்தவார் வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்...
இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார...