ஏற்றுமதியாளர்களை ஸ்திரப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!

Tuesday, April 16th, 2019

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் 2,000 ஏற்றுமதியாளர்களை ஸ்திரப்படுத்தும் தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உத்தேசித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக தொழில் முயற்சியாளர்களைத் தெளிவூட்டும் செயற்றிட்டமொன்றை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி சந்தையை வெற்றிகொண்ட வர்த்தகர்கள், ஏற்றுமதித் துறையில் முன்னிற்கும் நிறுவனங்கள், காப்புறுதி வங்கி உள்ளிட்ட விடயத்துக்கு பொறுப்பான நிறுவனங்களின் அதிகாரிகளினால் தொழில் முயற்சியாளர்கள் தெளிவுபடுத்தப்படவுள்ளனர்.

Related posts:


மொடர்னா, பைசரை விட சினோபார்ம், ஸ்புட்னிக் வீ, அஸ்ட்ராசெனக்கா செயற்திறன் கூடியவை - இலங்கையின் சிரேஸ்ட...
விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை - வலு...
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதும் ...