தொழில் முயற்சிகளை வலுப்படுத்தி சிறந்த முயற்சியாளராக பரிணமிக்க வேண்டும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்!

Monday, April 9th, 2018

சிறுதொழில் முயற்சியாளர்கள் தமது தொழில் முயற்சிகளை வலுப்படுத்தி சிறந்த முயற்சியாளராக பரிணமிக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாபெரும் சமுர்த்தி கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏற்ப்பாடு செய்துள்ள “சமுர்த்தி சௌபாக்கியா” எனும் இந்த வர்த்தக கண்காட்சி தொடர்ந்து 5 நாட்களிற்கு இடம்பெறவுள்ளது.

உள்ளூர் உற்ப்பத்திகள் மற்றும் அபிவிருத்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுத்துவதுடன் அவற்றை விற்பனை செய்வதன் ஊடாக அவற்றின் வர்த்தகத்தை மட்டுமல்லாது பொருளாதரத்தையும் மேம்படுத்தும் நோக்கிலேயே இக் கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இக் கண்காட்சி கூடத்தை மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இக் கண்காட்சியில் யாழ் மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலர் பிரிவுகளிலுமுள்ள நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட உள்ளுர் உற்பத்தியாளர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களில் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தி வருகின்றனர்.
மத்திய வங்கியின் வடமகாண பிராந்திய பணிப்பாளர் ஆர்.சிவதீபன் உள்ளிட்ட பலரும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சடலத்தை எடுத்துச் செல்ல பேரம் - யாழ். போதனா மருத்துவமனைப் பணியாளர்கள் நால்வருக்கு கட்டாய விடுமுறை!
இறக்குமதிக்கு மீள அனுமதியளிக்கப்படும் வரையில் சலுகைகளை வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் - வாகன இறக்குமத...
இலங்கையில் இதுவரை 21 இலட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – சுகாத...