மத வழிப்பாட்டுத் தலங்கள் பொது இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு!
Monday, April 22nd, 2019
நாட்டின் அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் ,சுற்றுலா உணவகங்கள்,மருத்துவமனைகள், தூதரகங்கள் மற்றும் அனைத்து கத்தோலிக்க மதத்தலைவர்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் போன்று முக்கிய அரசாங்க இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்பு பிரிவு மற்றும் அனைத்து பிரிவுகளின் பிரதானிகளின் பங்கேற்பில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைளுக்காக காவற்துறை , முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் , உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு பூராகவும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்குப் பாடசாலைகளில் யோகாப் பயிற்சி கட்டாயம் - 18 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது!
|
|
|


