இலங்கையின் முன்னேற்றம் போதாது – சுட்டிக்காட்டுகின்றது பிரித்தானியா!

Wednesday, July 18th, 2018

இன நல்லிணக்கம் தொடர்பாக மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தையே இலங்கை ஏற்படுத்தியிருப்பதாகவும் பெண்கள், தன்னினச் சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினர் ஆகியோரைப் பாரபட்சத்திலிருந்தும் பாதுகாப்பதற்கான சட்டத்தை குறைவாகவே கொண்டிருப்பமதாகவும் பிரிட்டன் தெரிவித்திருக்கிறது.

ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கை 2017 இல் இலங்கை முன்னுரிமைக்கான நாடாக தொடர்ந்து இருந்து வருகின்றது என்று பிரித்தானனிய உயர்ஸ்தானிகராலயம் கடந்த திங்கட்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல் முக்கியமான மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உட்பட கவலைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், எகிப்து, பர்மா, வடகொரியா, சோமாலியா, சிரியா, யேமன், சிம்பாப்பே என்பன பிரிட்டனின் மனித உரிமைகள் தொடர்பான கண்காணிப்புப் பட்டியலில் முன்னுரிமைக்குரிய நாடுகளாக இருக்கின்ற நிலையில் இலங்கையும் அந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சீனா, இஸ்ரேல், சவூதி அரேபியா என்பனவும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

பிரிட்டன் மனித உரிமைகள் தொடர்பாக பாரதூரமான கவலைகளைக் கொண்டிருக்கும் 30 நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டை மேம்படுத்துவது தொடர்பாக சாதகமான முறையில் செயற்படும் என எதிர்பார்க்கிறது என்று அறிக்கை கூறுகின்றது.

Related posts: