மாணவர்களின் எதிர்காலம் கருதி சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே மூன்றாம் தவணைக்காக பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, November 17th, 2020

சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே மூன்றாம் தவணைக்காக பாடசாலை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என  கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்து;டன் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக இரண்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அந்தவகையில் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சுகாதார பாதுகாப்பு என்பன தொடர்பிலே அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டு சுகாதார தரப்பின் விஷேட நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

அதற்கமையவே பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள முடியும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இதன்போது, கொவிட் செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பாடசாலைகள் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் மாணவர்களுக்கு Online மூலமாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: