24 மணித்தில் வாகன விபத்துக்களில் 15 பேர் பலி!
Sunday, March 14th, 2021
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
இதனடிப்படையில் கடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொல்ஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவர்களில் 07 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கியவர்கள், என்பதுடன் மிகுதி 05 பேர் ஏற்கனவே இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களில் 04 பேர் சாரதிகள் என்பதுடன் 03 பேர் அவர்களுடன் உந்துருளியில் பயணித்தவர்கள் எனவும் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேர்தல் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கு பொதுமக்கள...
|
|
|


