நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Friday, August 10th, 2018

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததைத் தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடத்தின் முதற்பாதியில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் 228 கோடி டொலராக இருந்ததுடன், இந்த வருடம் 235 கோடி டொலர் வரை உயர்ந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இதேவேளை இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஆகக்கூடுதலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் 104 கோடி டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: