காணாமல் ஆக்கப்பட்டோர் பணியக ஆணையாளர் பதவிக்கு 95 பேர் விண்ணப்பிப்பு!

Tuesday, November 21st, 2017

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிக்கு 95 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பொருத்தமானவர்களைத் தேர்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தை நிறுவுவதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்தப் பணியகத்துக்கான ஆணையாளர்களை அரசமைப்புப் பேரவையே நியமனம் செய்யவேண்டும்.

பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று நியமனங்களை மேற்கொள்ள அரசமைப்பு பேரவை முடிவு செய்திருந்தது. பத்திரிகைகள் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. கடந்த 6 ஆம் திகதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 95 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிலிருந்து பணியகத்துக்குத் தேவையான ஆணையாளர்கள் 7 பேரைத் தெரிவு செய்யும் பணியை அரசமைப்பு பேரவை  ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Related posts: