மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக தீர்மானம்!
Friday, September 10th, 2021
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த இந்திரஜித் குமார சுவாமி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2019 டிசம்பர் 24ஆம் திகதி, பேராசிரியர் டப்ளியூ. டி. லக்ஷமன் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வடபிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு!
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்துணர்வின் மூலம் உயர்த்த முடியும் - ஜனாதிபதி !
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் - யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர...
|
|
|


