உற்பத்திக் கைத்தொழில் துறையில் அதிகரிப்பு – புள்ளி விபரவியல் திணைக்களம்!

Wednesday, March 15th, 2017
கடந்த ஜனவரி மாதத்திற்கான கைத்தொழில் உற்பத்தி சுட்டெண் தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்திற்கான உற்பத்தியாற்றல் 7 % அதிகரிப்பை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜனவரி மாத உலோகம் அல்லாத கனிமப் பொருட்களின் உற்பத்தி 24 சதவீதத்திற்கு மேலான தொகையாலும், மின் உபகரண உற்பத்தி 12 சதவீதத்திற்கு மேலான தொகையாலும் அதிகரித்துள்ளது.

கட்டுமான கைத்தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக உலோகம் அல்லாத கனிப்பொருட்களின் உற்பத்தியாற்றல் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: