நாளைமுதல் மீண்டும் மூடப்படுகின்றது வடபகுதிக்கான உகையிரத பாதை!

Saturday, January 6th, 2024


மஹவ முதல் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதை முழுமையான புனரமைப்புக்காக  நாளை 7 ஆம் திகதிமுதல்  மூடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு  உத்தியோகபூர்வ விஜயத்தை  மேற்கொண்டிருந்த அமைசர் பந்துல குணவர்தன யாழ் புகையிரத நிலையத்தில் விசேட கண்காணிப்பு நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இதன்போது கடந்த வருடத்தில் ரயில்வே திணைக்களம் வடக்கு புகையிரத பாதைக்கு விசேட முன்னுரிமை அளித்து பாரிய முதலீட்டை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் கீழ் அனுராதபுரத்திலிருந்து ஓமந்த வரையிலான புகையிரத பாதையானது மணிக்கு நூறு கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பூரண புனரமைப்புக்காக மஹவ முதல் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதை நாளை முதல் மூடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்
இதனிடையே
கொழும்பு- காங்கேசன்துறை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதால் யாழ்ராணி ரயில் அனுராதபுரம் வரை சேவையில் ஈடுபடும். இதன் நேர அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.

மஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை சீரமைப்பு மற்றும்  புதிய சமிக்ஞை விளக்குகளும் பொருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளது. இந்த வேலைத்திட்டம் இந்தியா அரசின் 14.90 மில்லியன் டொலர் கடன் உதவியுடன் ircon நிறுவனத்தால்  ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனால் சுமார் 5 மாதங்களுக்கு கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: