சிறுமியின் வளைந்திருந்த முள்ளந்தண்டு நேராகியது – யாழ்.போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை!

Tuesday, December 20th, 2016

ஸ்கோலியோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வளைந்திருந்த சிறுமிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எலும்புமுறிவு சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு முள்ளந்தண்டு நேராக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் வளைந்திருந்த முள்ளந்தண்டு சத்திரசிக்ச்சை மூலமாக நேராகியுள்ளதாகவும் அவர் வைத்தியசாலை விடுதியில் வைத்துச்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநூராதபுரம் பகுதியைச் சேர்ந்த செவ்வந்தி செனவிரட்ன எனும் 14வயதுச் சிறுமிக்கே இந்தச் சத்திரசிகிச்சை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சத்திரசிகிச்சை மகத்தான வெற்றியே என்று வைத்தியசாலை வைத்திய நிபுணர் தெரிவித்தனர். முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்படுவதால் ஸ்கோலியாசிஸ் எனப்படும் பாரதூரமான குறைபாடுடைய இந்த நோய் ஏற்படுகின்றது, இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் முழுமையாகத் தெரியாத போதிலும் பல காரணங்கள் கூறப்படுகின்றது. பலவகையான சோதனைகளை நிபுணர்கள் மேற்கொண்ட போதும் இந்த நோய்க்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை.

இது ஒருவகை மரபணுக்கோளாறு என்று மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த நோய் தானாக ஏற்படவும் வாய்ப்புண்டு அல்லது பருவ வயதில் திடீர் வளர்ச்சி காரணமாகவும் ஏற்பட வாய்ப்புண்டு. குறித்த சிறுமிக்கு சுமார் 7 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த அறுவைச்சிகிச்சை பெரிய வெற்றியை அளித்துள்ளது. இந்தச் சாதனை எமது மண்ணுக்கும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் பெருமை தேடிதந்த ஒரு விடயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hospital_433_300

Related posts: