இலண்டன் தாக்குதலின் எதிரொலி – 500 பேருக்கு புகலிடம் மறுப்பு!

Saturday, March 25th, 2017

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த தாக்குதலை தொடர்ந்து சிரியா நாட்டை சேர்ந்த 500 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க அவுஸ்ரேலியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து தலைநகரான இலண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் கடந்த23) மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நிகழ்த்தியதில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

இலண்டன் நகரில் நிகழ்ந்த இந்த தாக்குதல் சர்வதேச அளவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், அவுஸ்ரேலியா நாட்டின் குடியமர்வு துறை அமைச்சரான Peter Dutton இன்று(24) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  இலண்டன் நகரில் நிகழ்ந்துள்ள தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு தாக்குதல் நடைபெறாமல் தடுப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமை. எனவே, அவுஸ்ரேலிய நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிரியாவை சேர்ந்த 500 அகதிகளுக்கு புகலிடம் மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் சிரியாவை சேர்ந்த 12,000 அகதிகளுக்கு விரைவில் புகலிடம் அளிக்கப்படும் என அவுஸ்ரேலியா அரசு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது வரை சுமார் 12,000 சிரியா அகதிகளுக்கு விசாக்களை அவுஸ்ரேலியா வழங்கியுள்ளது. இவர்களில் 10,000 பேர் வரை ஏற்கனவே அவுஸ்ரேலியா நாட்டில் குடியேறி விட்டனர்.ஆனால், எஞ்சியவர்களை அவுஸ்ரேலியா நாட்டிற்கு அனுமதிப்பதில் தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இவர்களில் 500 பேருக்கு புகலிடம் அளிக்க அவுஸ்ரேலியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: