நாட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராயவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, May 1st, 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டின் அனைத்து துறைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைமை குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்து பேசவேண்டிய தேவையுள்ளது. எனவேதான் அவர்களை அலரி மாளிகைக்கு அழைத்துள்ளேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகையில் சந்திப்பதற்கான அழைப்பொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்றையதினம் விடுத்திருந்தார். இது குறித்டது பல்வேறு செய்திகள் பலதரப்பட்டவர்களிடமிருந்தும் வெளியாகியிருந்த நிலையில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“இந்த அழைப்பு தொடர்பில் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில், இந்தப் பேச்சுக்கு முன்னர் அது தொடர்பில் மேலதிக கருத்துக்கள் எதனையும் வெளியிட நான் விரும்பவில்லை” – என்றார்.

இதேவேளை, எதிர்க்கட்சிகளின் மிரட்டல் கோரிக்கைக்கு அடிபணிந்து பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி தயாரில்லை என்று பிரதமர் மஹிந்த நேற்று தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts: