சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, October 7th, 2021

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் தலைவரான உபுல் ரோகண, பொதுமக்களிடையே சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் சரிவு காணப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

45 நாட்கள் நீடித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் , மார்ச் 2020 க்கு முந்தைய காலத்திற்கு ஒத்த அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து மற்றும் வேலை இடங்களும் சுகாதார வழிகாட்டல்களை புறக்கணித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசிகளால் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டால், நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும். ஆகையால் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் நிலைமையைக் கண்காணித்து சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: