இலங்கைக்கான நியூசிலாந்தின் வதிவிட உயர் ஸ்தானிகருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

Thursday, July 29th, 2021

இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது வதிவிட உயர் ஸ்தானிகரான மைக்கல் அப்பிள்டன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

புதிய உயர் ஸ்தானிகரை வரவேற்ற இராஜாங்க அமைச்சர், இரு நாடுகளுக்கிடையில் தற்போது காணப்படுகின்ற நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் திறனை எடுத்துரைத்தார்.

நியூசிலாந்துடனான வர்த்தக உறவுகளை மேலும் பன்முகப்படுத்தி, விரிவுபடுத்துவது குறித்து அவர் கலந்துரையாடியதுடன், பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பொருளாதார வலயங்கள் மற்றும் இலங்கையில் குறிப்பாக கொழும்புத் துறைமுக நகரில் நியூசிலாந்து முதலீட்டாளர்களுக்கு காணப்படுகின்ற வாய்ப்புக்களையும் வலியுறுத்தினார்.

இராஜாங்க அமைச்சினால் அண்மையில் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படைப்பாற்றல் பொருளாதாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வழிமுறைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் பாலசூரிய மற்றும் உயர் ஸ்தானிகர் அப்பிள்டன் ஆகியோர் கலந்துரையாடினர். விளையாட்டு, கல்வி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: