எதிர்வரும் 20ம் திகதி அரசமுகாமைத்துவ பதவி III க்கான போட்டிப்பரீட்சை !

அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை 2012 (1) – 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சை எழுதுவதற்கு 8877 பேர் தகுதிபெற்றுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
அனைத்;து பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சைக்கான அனுமதிஅட்டை தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டை தொடர்பில் ஏதேனும் விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் கீழ்க்கண்ட பரீட்சை திணைக்களத்தின் பிரிவுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்முடியும். தொலைபேசி இலக்கம் 011 2785230 / 011 2177075 / 1911 என்ன அவசர தொலைபேசியினூடாக 24 மணித்தியால சேவையினூடாகவும் விபரங்களை அறிந்துகொள்ளமுடியும்.
Related posts:
900 மில்லியன் ரூபா செலவில் தொல்பொருள் நிலையம் - ஜூலை மாதம் 3ம் திகதி திறந்துவைக்கிறார் ஜனாதிபதி!
மூடப்பட்டது இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையம்!
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு - 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவு...
|
|