900 மில்லியன் ரூபா செலவில் தொல்பொருள் நிலையம் – ஜூலை மாதம் 3ம் திகதி திறந்துவைக்கிறார் ஜனாதிபதி!

Saturday, June 29th, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி பொலன்னறுவை தொல்பொருள் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது என  ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பி.கே.எஸ்.ரவீந்திர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மநாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ள அவர்  900 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இந்த நிலையத்தில் இலங்கையின் ஆதி மக்கள் முன்னெடுத்த தொழில்நுட்ப தகவல்கள் ஆகியவற்றை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகில் ஏனைய நாடுகளின் தொழில்நுட்ப பாவனையிலும் பார்க்க இலங்கையில் இருந்த தொழில்நுட்பம் மிகவும் உயர்வானது என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் எனவும், பொலன்னறுவை மன்னர் காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை ஆய்வு செய்வதற்கும் அதனை பார்வையிடுவதற்கும் இங்கு வசதி உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் இராவணன் பயன்படுத்திய வாகன தகவலை அடிப்படையாகக் கொண்டே தற்பொழுது விண்ணில் பறக்கும் விமானம் தயாரிக்கப்பட்டதான தகவல் உண்டு எனவும், அது தொடர்பான விடயங்கள் இந்த தொல்பொருள் நிலையத்தில் உள்ளதா என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பி.கே.எஸ்.ரவீந்திர அதனையும் அங்கு உள்ளடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: