மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக ஆராய்வு!

Thursday, March 17th, 2016

வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு செய்யும் கூட்டம், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந்த ஆராய்வுக் கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நந்தசேன கலந்துகொண்டார்.

இதன்போது, இந்திய மீனவர்களின் றோலர் படகுகளின் அத்துமீறிய மீன்பிடியால் ஏற்படும் பாதிப்புக்கள், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி வலைகளின் பாதிப்புக்கள் குறித்து பணிப்பாளருக்கு மீனவ சங்கங்களால் எடுத்துக்கூறப்பட்டது.

வடமாகாண கடற்படை அதிகாரிகள், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களின் கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர்கள், வடமாகாணத்திலுள்ள மீனவ சங்கங்கள், சமாசங்கள் மற்றும் சம்மேளனங்கள் ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related posts: