கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!
Tuesday, September 13th, 2022
கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.
நேற்று (12) கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அபராதம் செலுத்த முடியாத மற்றும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என தமது கடமை பொறுப்பேற்கும் நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரி இராஜினாமா!
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மத்திய வங...
ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார சு...
|
|
|


