உவர் நீர் தடுப்பணை சேதமடைந்ததில் தமது நெற்செய்கை நிலங்களை இழந்துவிடும் ஆபத்தான நிலையில் விவசாயிகள்

Wednesday, May 18th, 2016

பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தின் கீழ்வரும் நாகமுனை உவர்நீர்த்தடுப்பணை சேதமடைந்ததில் இப் பகுதியில் நெற்செய்கையில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நிலங்களை இழந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மழைக்காலங்களில் பெய்யும் மிதமான நீர் கடலுக்குள் செல்வதற்கும் கடல் நீர் வயல் நிலங்களுக்குள்; உட்புகாவண்ணம் தடுப்பதற்குமென சுமார் 40ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாகமுனை உவர் நீர்த்தடுப்பனை அமைக்கப்பட்டிருந்தது.

யுத்த சூழல் ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்த உவர்நீர்தடுப்பணை சேதமடைந்திருந்த நிலையில் நாட்டின் வடபகுதி அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் சென்றதை தொடர்ந்து இந்த உவர் நீர்ததடுப்பணையை மீளமைக்கும் முயற்சிகளும் கைவிடப்பட்டிருந்தன.

இப்போது யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் பாதிப்புக்குள்ளான மக்களின் நலனிலிருந்து இம்மக்களுக்கான அபிவிருத்தி அரசியலை முன்னடுப்பதற்கு பதில்  தமதுவாக்கு வங்கிக்கு வசதியாக தொடர்ந்தும் இனவாத அரசியலை முன்னெடுப்பதிலேயே வடக்கின் அரசியல் தலைமைகள் குறியாக இருந்தமை காரணமாக தமிழ் மக்களின் அபிவிருத்திக்கான உட்கட்டுமானங்களை மீளமைப்பதில் பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசிய தலைமைகள் கவனம் செலுத்துவதை வேண்டுமென்றே தவிர்த்து வந்ததையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்.

இந்த நிலமை காரணமாக பூனகரி பிரதேசத்தின் கீழ்வரும் இது போன்ற பல உவர் நீர்தடுப்பணைகளை மீளவும் நிர்மாணிக்க முடியாமல் போனதில் இன்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை நிலங்களை விவசாயிகள் இழந்துவிடும் நிலைக்கு சென்றிருப்பதையும் இங்கு வருத்தத்துடன் சுட்டிக்காட்டவேண்டி இருக்கிறது.

அண்மையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் வேரவில் பொன்னாவெளி கமக்காரர் அமைப்பின் நிர்வாகிகளுடன் மேற்கொண்ட சந்திப்பில் சேதமடைந்த நிலையில் இருக்கும் இந்த உவர் நீர் தடுப்பணையை மீள நிர்மாணிப்பதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து  கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இத்தடுப்பணை பகுதிக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொள்ள இருப்பதோடு இந்த அணையை மீளமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.

 

Related posts: