உலக நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று !
Monday, July 9th, 2018
சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று(09) சிங்கப்பூரில் ஆரம்பமாகவுள்ளது. உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிலைபேறான நகரத்தை உருவாக்குதல் என்பதே இந்த மாட்டின் தொனிப்பொருளாகும்.
6 ஆவது சர்வதேச நகரங்கள் தொடர்பான மாநாடு மற்றும் அதனுடன் இணைந்ததாக நடைபெறவுள்ள சிங்கப்பூர் சர்வதேச வார நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(08) சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங் தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பிரதமர், பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
முச்சக்கரவண்டி தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!
வடக்கிற்கான ரயில் சேவை 08 மாதங்களுக்கு பூட்டு!
இலங்கை உட்பட நான்கு நாடுகளுக்கு மலேசியா செல்வதற்கு பயணத் தடை - மலேசிய போக்குவரத்து அமைச்சு!
|
|
|


