மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று வெளியாகும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Wednesday, February 28th, 2024
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, மின் கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றைய தினம் கூட உள்ளது.
முன்பதாக கடந்த 22 ஆம் திகதி கட்டணத் திருத்தம் தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட அதே அளவில் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பணிப்புறக்கணிப்பானது கவலையான விடயம் – ஜனாதிபதி.!
இணைய குற்றங்கள் வெகுவாக அதிகரிப்பு - மக்களுக்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை!
சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அத...
|
|
|


