ஆசிரியர்களும் அரச சேவையாளர்களே – இலகு ஆடை தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து!

Wednesday, November 23rd, 2022

ஆசிரியைகள் பலர் நேற்று இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத்தந்தமை தொடர்பில் கல்வியமைச்சர் இன்று நாடாளுமன்றில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் அரச சேவையாளர்களுக்காக பொது நிர்வாக அமைச்சு விடுத்த சுற்றறிகையில், இலகுவான ஆடைகளை அணிந்து வருவது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அரச சேவையாளர் என்ற வகுதிக்குள் ஆசிரியர்களும் உள்ளடங்குவதாக கூறிய சுசில் பிரேமஜயந்த, பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த விடயத்தில் பொதுநிர்வாக அமைச்சின் விளக்கத்தை தாம் எதிர்பார்ப்பதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

இதேவேளை, அடுத்த ஆண்டில் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இலவச பாடநூல்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

செஸ் வரி காரணமாக விலை அதிகரித்துள்ள அப்பியாச புத்தகங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: