அருகில் இருப்பவர்களை அதிகம் நம்பக்கூடாது. – முன்னாள் ஜனாதிபதி கோட்டா வேதனை!

Sunday, May 7th, 2023

“அருகில் இருப்பவர்களை அதிகம் நம்பக்கூடாது. நானும் அவ்வாறு நம்பித் தான் ஏமாந்து விட்டேன் என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது மனக் குமுறலை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்துடனான சந்திப்பின் போது, அவர் தனது வீட்டில் வைத்து உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது, “வாருங்கள் சாகர, என்னை மறந்துவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்” எனக் கூறி சாகரவை வரவேற்றாறுள்ளார் கோட்டாபய.

“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” சேர் எனக் கோட்டாபயவிடம் கூறிய சாகர, வந்த நோக்கத்தையும் விவரித்துள்ளார்.

இதன்போது“அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் எப்படிப் போகின்றது?’ என்று கோட்டாபய கேட்க, “சிறப்பாகச் செல்கின்றது சேர், எமது கட்சிக்கு எதிராகப் பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகளை தற்போது அவிழ்த்து வருகின்றோம்” என்று பதிலளித்தார் சாகர.

அதன்போது“அருகில் உள்ளவர்களை அதிகம் நம்பக்கூடாது சாகர. நானும் அவ்வாறு நம்பித்தான் பதவிகளை வழங்கினேன். அவர்களை நம்பியது என் தவறுதான். துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன் ” என்று கூறி கலங்கினாராம் கோட்டாபய.

இந்நிலையில்“சேர், பழைய கதை வேண்டாம். நாம் முன்நோக்கிச் செல்வோம்” என்று கூறி விடைபெற்றாராம் சாகர.

Related posts:


வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் முன்னாயத்தங்களோடு வரவேண்டும் - யாழ். போதனா வ...
வெசாக் பூரணைத்தின அலங்கார காட்சிகள் ஊடகங்கள் வாயிலாக காட்சிப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் தயாசி...
அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை, வெகுவிரைவில் நிறைவேற்ற வேண்டும் - சர்வகட்சிக் கூட்டத்தில்...