பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் வலியுறுத்து!

Thursday, December 9th, 2021

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகின்றது. அவ்வாறான மாணவர்களின் ஊடாக சில உப கொத்தணிகள் உருவாகியுள்ளன.

இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான பொறுப்பினை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களே ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறும் பெற்றோர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அதேபோன்று அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலைகளின் சேவையாளர்களும் தொற்று பரவாத வகையில் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

அவ்வாறு செயற்படாவிடத்து மீண்டும் பாடசாலைகளை மூடக்கூடிய நிலை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காப்புறுதி நிறுவனங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழ...
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!
மேலும் இரு நாள்களுக்கு கனமழை - மழையின் போக்கில் மிகப் பெரியளவிலான இடம் சார்ந்த வேறுபாட்டை உணர முடிவத...