காப்புறுதி நிறுவனங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை!

Tuesday, June 20th, 2023

பதிவு செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட முகவர்களிடமிருந்து மட்டுமே காப்புறுதிக் கொள்கைகளை கொள்வனவு செய்யுமாறு இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத காப்புறுதி நிறுவனங்களினால் மோசடி செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகள் 2000 ஆம் ஆண்டின் எண் 43 இன் காப்பீட்டுத் தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானவை என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் குறித்து  info@ircsl.gov.lk  எனும் இணையத்தளத்தினூடாக தெரிவிக்குமாறு இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் காப்பீட்டுக் கொள்கைகள் தொடர்பான சட்டப்பூர்வ வழிகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் , காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் பட்டியலை www.ircsl.gov.lk எனும்  இணையதளத்தின் மூலம் பார்வையிட்டு செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: